Posts

Showing posts from March, 2019

மரங்களின் சிறப்பு

முன்னுரை :-                    ஓரு மரத்தை நடுவதற்கான மிகச் சிறந்த சந்தர்ப்பம் 20 வருடங்களுக்கு முன்பாகும்.இரண்டாவது சந்தர்ப்பம் இன்றாகும்  சீனப் பழமொழி வாழ்நாளில் எப்போதாவது நாம் ஒரு மரத்தை நட்டிருக்கிறோமா? இல்லையெனில் இன்றே ஒரு மரத்தை நட முயற்சிப்போம்.மரம் நடுபவர்கள் உலகில் குறைவாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் மரங்களைத் தரிக்க நிறையப் பேர் இருக்கின்றனர்.நீங்கள் ஒரு மரத்தைத் தொடும்போது பெரும்பாலும் ஒரு மனிதரைத் தொடுவதாகவே நினையுங்கள்.உங்களால் பார்க்கவியலாத ஒரு மனிதனின் உழைப்பு  ஒவ்வொரு மரத்திற்குப் பின்னும் இருக்கிறது.ஒரு மரத்தை நடுவதென்பது வெறுமனே ஒரு செயல் மாத்திரமல்ல.அது ஒரு வாழ்க்கை முறை.மானுடத்தின் மீது மனிதன் கொள்ளும் மிகப் பெரிய கரிசனையின் வெளிப்பாடு அது. மரங்களின் சிறப்பு :-                         மரங்களால் சுற்றுச்சூழல்வளமாகும் மனித வாழ்வு நலமாகும். மரம் வளர்க்க மழை; மழை பொழிய வறுமை ஒழியும்.ஆளுக்கொரு மரம் நடுவோம் மண்ணில் வாழ; நாளை மண்ணை மகிழ்வாய் ஆள. ம...