பொங்கல் - Pongal tamil composition
முன்னுரை: வரப்புயர நீருயரும்! நீருயர நெல்லுயரும்! நெல்லுயுர குடியுயரும்! குடியுயர கோனுயர்வான்!. தங்க தமிழ் மக்களால் கொண்டாடப்படும் அறுவடை திருவிழா பொங்கல் பண்டிகை. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பற்றியும், அதைக் கொண்டாடும் முறைகள் பற்றியும் இங்கே விரிவாகப் பார்க்கலாம். பொங்கல்: தைப் பொங்கல் என்பது, நாம் சாப்பிடும் நெல்லை விளைவிக்க எவையெல்லாம் உதவியதோ அவற்றுக்கெல்லாம் நன்றிகூறி வழிபடுவதாகும். புதிதாக விளைந்த நெல்லை அறுவடை செய்து அரிசியாக்கி பொங்கலிட்டு; இயற்கைத் தெய்வத்துக்கும், சூரியன், மாடு உட்பட உதவிய எல்லாவற்றுக்கும் நன்றி செலுத்துவதே பொங்கல். கொண்டாடும் விதம்: போகி: பொங்கலுக்கு முதல்நாள் போகி. மழைக்கடவுளுக்கு நன்றி செலுத்துவதுடன் நமது பழைய ஆடைகளை குப்பையில் எறிந்துவிடும் விழா. விளைச்சல் முடிந்து பிறக்கும் ஆண்டு புதுமையாய், மகிழ்ச்சிகரமாய் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள். தைப் பொங்கல்: தை 1 .சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாகும். அதிகாலையில் சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு, படையல் செய்வது வழக்கம். மாட்டுப் பொங்கல்: தை 2. விவசாயத்திற்கு ...